வரலாறு - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்

வரையறுக்கப்பட்ட தென்மேற்கு பேருந்து கம்பெனியின் ஊழியர்களுக்கு மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக இரத்மலானை பணிமனையில் (டிப்போ) இந்த நிறுவகம் ஆரம்பத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, 1958ஆம் ஆண்டு பேருந்து கம்பனிகள் தேசியமயப்படுத்தப்பட்டதை அடுத்து இது இலங்கை போக்குவரத்து சபையின் உடைமையாக்கப்பட்டது. தேசியமயப்படுத்தப்பட்டதன் பின்னர் இதற்கு "இபோச மருத்தவ பிரிவு" எனப் பெயரிடப்பட்டது.

அதன் பின்னர் இந்த நிறுவகம் வழங்கிய சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இது இல.170, ஹைலெவல் வீதி, நுகேகொட என்ற இடத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு இது, போக்குவரத்து அமைச்சின் கீழ் வருமான உற்பத்தி அரசாங்க நியதிச்சட்ட நிறுவகமாக 1997ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவக சட்டத்திற்கு அமைவாக இயங்குகின்றது. அதன் பிரதான குறிக்கோளை அடவதற்காக நாடளாவிய ரீதியில் இருபத்தைந்து (25) கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நிறுவகத்தின் நோக்கின்படி தலைமை அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்கள் ஊடாக, கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் என்பவற்றின் சாரதிகளுக்காக முறையான மருத்துவ பரிசோதனைகளை நடத்தி மருத்துவ அறிக்கைகளை வழங்குவதற்காக உரிய சேவைகளை வழங்குவதன் மூலம் இந்த நிறுவகம் அதன் இலக்கை அடைவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.