வினா விடை - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்

NTMI நுகேகொடையில் எங்கேயிருக்கிறது?

 • நுகேகொடையில் ஹைலெவல் பாதையில் மேம்பாலத்திற்கு முன்னால் இருக்கின்றது. நுகேகொடை CIBக்கும் ரெலிகொம்முக்கும் இடையில் இருக்கிறது. அது நீல நிறமான கட்டிடம். அதன் இலக்கம் 170.

மருத்துவ பரிசோதனைக்கு என்ன கொண்டுவர வேண்டும்?

புது விண்ணப்பதாரியாக இருந்தால்,

 • தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு

அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிப்பதாக இருந்தால்,

 • தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டு
 • பழைய சாரதி அனுமதிப்பத்திரம்
 • தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் இரண்டும் காணாமற்போயிருந்தால், ஆறு மாதங்களுக்குள் பெறப்பட்ட பொலிஸ் அறிக்கையைக் கொண்டுவரவும். வாகன பதிவாளர் திணைக்களத்தில் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் விபரங்களைக் கொண்டு வரவும்.

நீதிமன்ற தொடர்பாக இருந்தால்,

 • தேசிய அடையாள அட்டை மற்றும் நீதிமன்றத்தினால் அல்லது போக்குவரத்து காவல்துறையினால் வழங்கப்பட்ட தொடர்பு கடிதம்.

பாதை அனுமதிப்பத்திரமாக இருந்தால்,

 • தேசிய அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம்

மருத்துவ பரிசோதனைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

 • ஏறக்குறைய 02 மணித்தியாலங்கள்

நிறுவகத்திற்கு வருவதற்கு முன்னர் எவரும் நேரம் ஒதுக்கிக்கொள்ள முடியுமா?

 • இல்லை

மாற்றுத்திறனாளியொருவர் மருத்துவ சான்றிதழைப் பெறுவது எப்படி?

 • வார நாட்களில் மருத்துவ பரிசோதனைக்கு வரவும். காலையில் வருவது நல்லது
 • மருத்துவ பரிசோதனையின் பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான வாகன வகை தீர்மானிக்கப்படும்

ஏனைய நிறுவனங்களில் செய்யப்பட்ட ஆய்வுகூட புலனாய்வு ஏற்றுக்கொள்ளப்படுமா?

 • இல்லை. தேவையான புலனாய்வு NTMIனால் செய்யப்படும்.

சில நாட்களுக்கு முன்னர் பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் காணாமற்போனால் ஒரு நபர் அதன் பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியுமா?

 • NTMI மருத்துவ சான்றிதழ்களின் பிரதியை நிறுவனத்தில் வைத்துக்கொள்ளுவதில்லை. எனவே சான்றிதழ் காணாமற்போனால், சேவை பெறுநர் புதிய சான்றிதழைப் பெறுவதற்கு ரூ. 800.00 செலுத்தி மீண்டும் புதிய மருத்துவ பரிசோதனைக்குத் தோற்ற வேண்டும்.

நிறுவனம் காலையில் எத்தனை மணிக்கு திறக்கப்படும்?

 • வாடிக்கையாளர்களுக்காக வழமையாக காலை 7.30 மணிக்கு திறக்கப்படும்
 • அது கிளைக்கு கிளை வித்தியாசப்படும்

எத்தனை மணிவரை டோக்கன் வழங்கப்படும்?

 • அதற்கு திட்டவட்டமாக நேரமில்லை
 • அன்றைய தினம் எத்தனை சேவை பெறுநர்கள் பரிசோதிக்கப்படுவார்கள் என்பதைப் பொருத்தது

டோக்கன் இலக்கத்தை ஒரு நபர் ஒதுக்கிக்கொள்ள முடியுமா?

 • இல்லை, நீங்கள் வந்து டோக்கன் இலக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.