பொதுவான தேவைப்பாடுகள் - தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம்

இலகுரக வாகனங்களுக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல்

 • விண்ணப்பதாரர் சமுகமளிக்க வேண்டும்
 • விண்ணப்பதாரர் 17 வயதைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும்
 • தேசிய அடையாள அட்டையை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கமுள்ள செல்லுபடியான கடவுச்சீட்டைக் கொண்டுவர வேண்டும். (தேசிய அடையாள அட்டையை பரிசோதிப்பதன்மூலம் முறைமை செயற்படும்)
  புகைப்படங்கள் தேவையில்லை. நடவடிக்கைமுறையின்போது தகுந்த புகைப்படங்கள் எடுக்கப்படும்.
 • தூரப்பார்வைக்கு கண்ணாடி பாவிப்பதாக இருந்தால் அதைக் கொண்டுவரவும்
 • ஏதேனும் நோய்க்கு நீங்கள் நீண்ட நாட்கள் பெறுபவராக இருந்தால் (உதா: நீரிழிவு, மனஅழுத்தம் போன்றவை) குறிப்பிட்ட காலத்திறகு மருந்து எடுக்கவும்.

கனரக வாகனத்திற்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல்.

 • இலகுரக வாகன அனுமதிப்பத்திரம் வைத்திருக்க வேண்டும். (B மற்றும் B1 வாகன வகுப்புகள் மாத்திரம்) விண்ணப்ப திகதிக்கு குறைந்தபட்சம் 2 வருடங்களுக்கு முற்பட்டதாக இருக்க வேண்டும்.
 • தெளிவான தேசிய அடையாள அட்டையை அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கமுள்ள செல்லுபடியான கடவுச்சீட்டையும் சாரதி அனுமதிப்பத்திரத்தையும் கொண்டுவர வேண்டும். (தேசிய அடையாள அட்டையுடன் முறைமை செயற்படும்)
  • மோட்டார் பஸ் மற்றும் மோட்டார் லொரிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 5 அடி உயரம் இருக்க வேண்டும்.
  • கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திர பயிலுநர் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பதாரர் 20 வயதை அடைந்திருக்க வேண்டும்.
  • கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பயிலுநர் அனுமதி பெறுவதற்கு விண்ணப்பதாரர் 21 வயதைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும்.

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்

 • தெளிவான தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டையும் பழைய சாரதி அனுமதிப்பத்திரத்தையும் கொண்டுவர வேண்டும்.

நீதிமன்றத்திற்கு மருத்துவ அறிக்கை பெறுவதற்கு

 • தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டையும் நீதிமன்றம் வழங்கிய கடிதத்தையும் கொண்டுவர வேண்டும்
 • சேவைபெறுநர் சிறைச்சாலையிலிருந்து கொண்டுவரப்பட்டால், அவர் தடுப்புடன் வரவேண்டும்

பாதை அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு

 • தெளிவான தேசிய அடையாள அட்டையை அல்லது செல்லுபடியான கடவுச்சீட்டையும் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தையும் கொண்டுவர வேண்டும்.