நோக்கு

சுக்கான் பிடிக்கும் ஒவ்வொரு சாரதியையும் ஆரோக்கியமானவராக்குதல்

செயற்பணி

இலங்கையின் மருத்துவ துறையில் முன்னோடிகள் என்ற வகையில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் தரமான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டு அவர்களுடைய உடல், உள தகுதியை சான்றுப்படுத்துதல்.

நோக்கங்கள்

  • சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான அனைத்து விண்ணப்பதாரர்களின் உடல், உள தகுதியைப் பரிசோதித்தல்
  • பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்கப்படும் அனுமதிப்பத்திரங்களின் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களின் தரத்தை மேம்படுத்துதல்
  • முறையான மனித வளங்கள் முகாமைத்துவம் ஊடாக தரமான சேவைகளை அடைதல்

1997ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக நிறுவகத்தின் செயற்பாடுகள்

  • கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களின் சாரதிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குதல்.
  • கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வகையான வாகனங்களின் சாரதிகளுக்கு உடல், உள தகுதிக்கு பரிசோதனை செய்து சான்றிதழ்களை வழங்குதல்.
  • சாரதிகள் மற்றும் அனைத்து ரக மோட்டார் வாகனங்களை இயக்குகின்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு அவர்களுடைய தகைமை மற்றும் பொருத்தமானதன்மை சம்பந்தமாக பரிந்துரைசெய்தல்.
  • எந்தவிதமான மோட்டார் வாகனங்களின் வீதி விபத்துக்கள் தொடர்பில் உரிய மருத்துவ சேவைகளையும் உதவிகளையும் வழஙகுதல்.
  • நிறுவகம் உட்பட, அனைத்து ரக வாகனங்களை உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தகுதி பெற்றவர்கள் மாத்திரம் ஓட்டுகின்றார்கள் மற்றும்  இயக்குகின்றார்கள் எனபதை உறுதிப்படுத்துதல்.
  • கைத்தொழில் சுகாதாரம் மற்றும் கைத்தொழில் விபத்து சம்பந்தமாக மருத்துவ ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குதல்.
  • சம்பந்தப்பட்ட அமுலாக்கும் அதிகாரசபைகள் பின்பற்றுவதற்காக போக்குவரத்து மருத்துவ நடவடிக்கைகள் தொடர்பாக வரையறைகளை ஏற்படுத்துதல் மற்றும் தகுந்த தரங்களை உருவாக்குதல்.